ஒட்டாவாவில் சோகம் 6வது மாடியில் இருந்து விழுந்து 4 வயதுச் சிறுவன் பலி!

ஒட்டாவாவின் சாண்டி ஹில் (Sandy Hill) பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடி ஜன்னல் வழியாக விழுந்து பலியான எலியா பிரானி (Eliyah Pirani) என்ற நான்கு வயதுச் சிறுவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வயது நிரம்பிய எலியா பிரானி இயற்கையையும், விலங்குகளையும் நேசிக்கும் ஒரு கனிவான சிறுவன் என்று அவனது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை வெப்பம் அதிகமாக இருந்ததால் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருந்த வேளையில், சிறுவன் தவறுதலாகக் கீழே விழுந்துள்ளான்.

அவனது தாய் சஜேதே தாஹேரி (Sajedeh Taheri) ஜன்னல் வழியாகச் சிறுவன் விழுந்ததைக் கண்டு அலறியபடி, தனது மற்றுமொரு குழந்தையுடன் வெறும் காலுடன் கீழே ஓடி வந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட Homestead வாடகை நிறுவனம், ஜன்னல்களில் பாதுகாப்புத் தடைகள் (Window restrictors) இருப்பது கட்டாயம் என்றும், அவை மாற்றப்படக்கூடாது என்றும் கூறியுள்ளது.

ஆனால், சிறுவனின் அறையில் அத்தகைய பாதுகாப்புத் தடை எதுவும் இல்லை என அவனது தாய் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பொறுப்பற்ற பெற்றோர் அல்ல; மிகவும் அக்கறையுடன் பிள்ளைகளை வளர்த்தோம், மக்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தந்தை முகமது பிரானி (Mohammad Pirani) உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஒட்டாவா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, குறித்த குடியிருப்பில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் சோதனையிட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles