எரிசக்தி நெருக்கடி – ஏன் அவசர கால எண்ணெய் கையிருப்பு இல்லாமல் கனடா திண்டாட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் Strait of Hormuz கடல்வழி பாதை மூடப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது கையிருப்பில் இருந்து 400 மில்லியன் பெரல் எண்ணெயை விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில், G7 நாடுகளில் கனடாவிடம் மட்டும் ஏன் மூலோபாய எண்ணெய் கையிருப்பு (Strategic Reserve) இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் Tim Hodgson, கனடா ஒரு “நிகர ஏற்றுமதி நாடு” (Net Exporter) என்பதால், 90 நாட்களுக்கான இறக்குமதிக்கு சமமான எண்ணெயை கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை என விளக்கமளித்துள்ளார்.

ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்தாலும் கையிருப்பை வைத்துள்ள நிலையில், கனடாவின் கையிருப்பு பூஜ்ஜியமாக இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது கனடாவின் எண்ணெய் உற்பத்தி ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், உலகளாவிய விநியோக இடைவெளியை நிரப்ப கனடாவால் உடனடியாக உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles