உலகளாவிய LNG ஏற்றுமதியில் முன்னணி நாடாக மாறும் கனடா – புதிய ஆய்வில் தகவல்

cbc

கனடாவில் (Canada) கடந்த ஆண்டு செயற்படத் தொடங்கிய ஒரேயொரு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆலையை விரிவுபடுத்துவதன் மூலம், உலகின் முன்னணி எரிவாயு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளதாக S&P Global வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஆண்டுக்கு 14 மில்லியன் தொன் எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கனடாவின் (Canada) இந்தத் துறையை, ஆண்டுக்கு 100 மில்லியன் தொன்னிற்கும் அதிகமாக உயர்த்த மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கை எட்டினால், 2050-ஆம் ஆண்டிற்குள் சுமார் 1 ட்ரில்லியன் டொலர் முதலீடும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, ஆசிய (Asia) நாடுகளுக்கான குறுகிய கடல்வழிப் போக்குவரத்து வசதி மற்றும் ஏனைய நாடுகளை விட 55 சதவீதம் குறைவான பசுமை இல்ல வாயு வெளியேற்றம் ஆகியவை கனடாவிற்கு (Canada) சாதகமாக அமைந்துள்ளன.

எனினும், டெக்சாஸுடன் (Texas) ஒப்பிடும்போது அனுமதி வழங்கும் நடைமுறைகளில் ஏற்படும் 27 மாத காலதாமதம் மற்றும் குழாய்களை அமைப்பதற்கான 160 சதவீத அதிக செலவு ஆகியவை பெரும் சவால்களாக உள்ளன.

இந்நிலையில், உலக அரங்கில் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) உள்ள நன்மதிப்பைப் பயன்படுத்தி, அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தினால், அமெரிக்காவை (U.S.) மட்டுமே சார்ந்திருக்கும் கனடாவின் (Canada) எரிசக்திப் பொருளாதாரத்தை உலகமயமாக்க முடியும் என S&P Global நிறுவனத்தின் உப தலைவர் டேனியல் யெர்கின் (Daniel Yergin) தெரிவித்துள்ளார்.

Previous articleஅமெரிக்க உறவுகள் : கனடிய பிரதமருக்கும் கியூபெக் முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல்
Next articleபிரதமர் மார்க் கார்னியின் ஐரோப்பா பயணம் தீரவாகாது – எதிர்க்கட்சிகள் விசனம்!