உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி – மாற்று வழிகளில் சேவைகளை வழங்கத் தயாராகும் Daily Bread Food Bank!

Toronto Stadiumத்தில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான வீதி மூடல்கள் மற்றும் போக்குவரத்துத் தடைகளுக்கு மத்தியிலும், தமது வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றிச் சேவைகளை வழங்குவதற்கு Daily Bread Food Bank நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது குறித்து அதன் CEO Neil Hetherington கருத்துத் தெரிவிக்கையில், உலகக் கிண்ணப் போட்டியால் பெரும் பொருளாதார நன்மைகள் கிடைத்தாலும், உணவகம் செல்ல வேண்டிய தேவையுடைய எளிய மக்களுக்கு இதனால் சவால்கள் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Daily Bread அமைப்பு Toronto முழுவதும் 200க்கும் மேற்பட்ட உணவு உதவித் திட்டங்களை நடத்துகிறது.

போட்டி நடைபெறும் நாட்களில் Queen Quay West பகுதியில் உள்ள அதன் ஒரு கிளை மூடப்படும் என்பதால், மக்கள் Carr Street இல் உள்ள Alexander Park போன்ற மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றனர்.

அத்துடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உணவகங்களுக்குக் கூடுதல் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் மற்றும் TTC பொதுப் போக்குவரத்துப் தாமதங்கள் ஏற்படலாம் என்பதால், மக்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறும், சில கிளைகளின் வேலை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமது விநியோக வாகனங்களை அத்தியாவசிய சேவைகளாகக் கருதி, மூடப்பட்ட வீதிகளினூடாகச் செல்ல அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு City of Toronto நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகர நிர்வாகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், மனித உரிமைகள் அடிப்படையில் வீடற்ற மக்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

போட்டி நாட்களில் காத்திருப்பு நேரங்கள் அதிகரிக்கலாம் என்பதால், கிளைகளின் விபரங்களை Daily Bread Food Bank இணையத்தளத்தில் அறிய முடியும்.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles