அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட கனடாவின் டிக்டாக் பிரபலம் MAID திட்டத்தின் மூலம் உயிரிழப்பு!

கனடாவின் (Canada) விக்டோரியா (Victoria, B.C.) பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் (TikTok) நட்சத்திரமான ரெபெக்கா லூனா (Rebecca Luna – 49) மருத்துவ உதவியுடன் கூடிய மரண நிவாரணச் சட்டத்தின் (MAID – Medical Assistance in Dying) மூலம் தனது உயிரைத் துறந்துள்ளார்.

தனது 48வது வயதில் இளம் பருவ அல்சைமர் (Young-onset Alzheimer’s) நோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது நோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சுமார் 93,000 பின்தொடர்பாளர்களைப் பெற்றிருந்தார்.

நோய் பாதிப்பு மிக வேகமாகக் தீவிரமடைந்ததால், ஜூலை 25 அன்று தனது குடும்பத்தினர் முன்னிலையில் MAID முறையில் அவர் மரணமடைந்தார்.

“எனக்குச் பாதுகாப்பற்ற உணர்வைத் தரும் உடலில் வாழ்வது கடினமாக உள்ளது” என அவர் வெளியிட்ட இறுதிப் பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தாயார் ஆவார்.

Related Articles

Latest Articles