அமெரிக்க செல்லும் கனடியர்கள்களின் இலத்திரனியல் சாதனங்களை எல்லையில் சோதனையிட அதிகாரிகளுக்கு அதிகாரம் அறிவிப்பு!

அமெரிக்க எல்லைக்குச் செல்லும் கனடியர்களின் மொபைல் போன்கள் (Cellphones) மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் (Border Officers) எவ்வித சந்தேகமுமின்றி சோதனை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் (U.S. Court of Appeals for the Second Circuit) நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் மூலம் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குடியேற்ற வழக்கறிஞர்கள் ஜோயல் சாண்டலுக் (Joel Sandaluk) மற்றும் லியோனார்ட் டி.எம். சாண்டர்ஸ் (Leonard D.M. Saunders) ஆகியோர் கனடியப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர்.

அதன்படி, எல்லை அதிகாரிகள் சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் வரை போனின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்ய முடியும் என கூறியுள்ளனர்.

அதேபோல், பயணிகள் தாங்கள் கூறிய காரணத்திற்காகவே அமெரிக்காவிற்கு வருகின்றனரா அல்லது சட்டவிரோதமாகப் பணியாற்றவோ அல்லது தங்கவோ திட்டமிடுகிறார்களா என்பதைக் கண்டறிய இச்சோதனை நடத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

மொபைல் போனின் கடவுச்சொல்லை Password வழங்க மறுத்தால், பயணிகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

எனவே, தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகள் குறித்து கவலைப்படும் கனடியர்கள், அத்தகைய உணர்திறன் மிக்க தகவல்கள் அடங்கிய சாதனங்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், எல்லை அதிகாரிகளின் கேள்விகளுக்கு உண்மையான மட்டுமே பதிலளிக்குமாறும் வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles