அமெரிக்காவின் Virginia மாநிலத்தில் உள்ள Newport News நகரில் உள்ள Richneck Elementary School இல், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 வயது சிறுவன் ஒருவன் தனது ஆசிரியை Abby Zwerner என்பவரைச் சுட்ட சம்பவம் தொடர்பான புதிய பொலிஸ் உடல் கேமரா (Bodycam) காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தாயாரின் 9-mm கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்திய இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் உயிர் பிழைத்தார்.
சம்பவத்தின் பின் பொலிஸாரும் வாசிப்பு நிபுணரும் சிறுவனிடம் விசாரித்த போது, “நான் சிறைக்குச் செல்வதைப் பற்றி கவலைப்படவில்லை” எனவும், ஆக்ரோஷமான வார்த்தைகளையும் சிறுவன் பேசியது அக்காணொளியில் பதிவாகியுள்ளது.
சிறுவனின் தாயார் Deja Taylor கடந்த 2023 டிசம்பரில் குழந்தை neglect வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
மேலும், எச்சரிக்கைகளைப் புறக்கணித்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகப் போராடிய ஆசிரியைக்கு 2025 நவம்பரில் 10 மில்லியன் டொலர் நட்டயீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.