அஜாக்ஸில் பரபரப்பு – திருடப்பட்ட பாடசாலைப் பேருந்தை மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மோதிய நபர் கைது!

கனடாவின் அஜாக்ஸ் (Ajax) பகுதியில், போதையில் பாடசாலைப் பேருந்து ஒன்றை ஓட்டிச் சென்று மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவகத்தின் வாகனச் சேவைப் பாதையில் (Drive-thru) மோதிய 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 11 ஆம் திகதி இரவு 11:30 மணியளவில் டான்டன் வீதி மேற்கு (Taunton Road West) மற்றும் வெஸ்ட்னி வீதி வடக்கு (Westney Road North) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

திருடப்பட்ட சிறிய ரகப் பாடசாலைப் பேருந்து ஒன்றை தாறுமாறாக ஓட்டிச் சென்ற நபர், மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் வாகனச் சேவைப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த டர்ஹாம் பொலிஸார் (Durham police), பேருந்தை நிறுத்தி ஓட்டுநரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

குறித்த நபர் நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடம் ஒன்றில் புகுந்து, அங்கிருந்த பிற வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு இந்தப் பேருந்தைத் திருடிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டானர் ஜோன் டேவிஸ் (Tanner Jon Davis) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் மீது, போதையில் வாகனம் செலுத்தியமை, திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை, பொலிஸாரின் விசாரணைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தனது பெயரை மாற்றிக் கூறி ஏமாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles